சிஏஏ போராட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களிடையே பயங்கரவாதத்தை தூண்டியதாக கூறி ஐ.எஸ்ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீ நகரைச் சேர்ந்த தம்பதிகள் ஜகன்ஜிப் சமி (Jahanjeb Sami ) மற்றும் ஹினா பசீர் பேக் (Hina Bashir Beg) ஆகியோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திய போது, இஸ்லாமிய இளைஞர்களிடம் பயங்கரவாதத்தைத் தூண்டியதாக உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியின் ஜாமியா நகரில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறை இணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாகா (Pramod Singh Kushwah) இதனை தெரிவித்தார்.