Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி போலீஸ் சிறப்பாக செயல்பட்டனர் – அமித்ஷா விளக்கம் ….!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார். 

வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு  இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது. வட கிழக்கு டெல்லியில் 25ஆம் தேதிக்கு பின் எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. டெல்லி வன்முறை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

டெல்லி வன்முறையில் மேலும் பரவாத வகையில் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர். டெல்லி வன்முறையை கண்காணிக்கவே டிரம்ப் உடனான பயணத் திட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. டெல்லி வன்முறைக்கு நிதிஉதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்தார்.அப்போது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் பொறுப்பில்லாமல் வெளிநடப்பு செய்வது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது அமித்ஷா தெரிவித்தார்.

Categories

Tech |