Categories
அரசியல் தேசிய செய்திகள்

“டெல்லி கலவரம்” இந்து…. முஸ்லீம் பேச்சுக்கு இது நேரமல்ல….. அமித்ஷா பேச்சு….!!

இந்து, முஸ்லீம் என சண்டையிட்டு கொள்வதற்கு இது நேரமல்ல என பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா மக்களவையில் பேசினார்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற கலவரம் இந்தியாவில் உள்ள மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. திடீரென ஏற்பட்ட அந்த கலவரம் தொடர்பான புகைப்படங்கள் பலரின் மனதை உருக செய்தது.

இதுகுறித்து மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா இன்று மக்களவையில் டெல்லி கலவரம் குறித்து விளக்கம் அளித்தார். அதில்,

இந்து முஸ்லிம் என சண்டையிட்டுக் கொள்வதற்கு இது நேரமல்ல. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம். இதற்கு பாஜக எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிகப்படியான கலவரங்கள் நடந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் வெளிநடப்பு செய்தனர்.

Categories

Tech |