டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர்.
இந்தியாவில் அதிகப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக இந்த மதக்கூட்டம் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றவர்களில் 67 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற தெலுங்கானாவை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் இறந்த நிலையில் இந்த நிகழ்வு பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில் தற்போது ஆந்திராவிலும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.