Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியின் ரன் எடுக்காத சாதனை என்ன தெரியுமா…..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின்  5 வீரர்கள்  ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட் இழந்து சாதனை படைத்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  தொடங்கிது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய  பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43 (30) ரன்களும், சர்பராஸ் கான் 39 (29) ரன்களும் மந்தீப் சிங் 29*(21), ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஷிகர் தவானுடன், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து ரன்களை உயர்த்தினர். இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. அதன் பின்  ஷிகர் தவான் 30 (25) ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 28 (22) ரன்களும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் கண்டு சிறப்பாக விளையாடிய ரிசப் பண்ட்  39 (26) ரன்களும், கோலின் இங்ரம் 38 (29) ரன்களும், குவித்து இக்கட்டான நிலையில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

#KXIPvDC: ரன் எடுக்காமல் சாதனை படைக்க முடியுமா?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் 5 வீரர்கள் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அவர்கள் பிருத்வி ஷா, கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ககிசோ ரபாடா, லாமிச்சனே ஆகியோர்  ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் வீரர்கள்  ரன்கள் ஏதும் எடுக்காமல் அதிக விக்கெட்டை பறிகொடுத்த அணியாக டெல்லி அணி  இடம் பிடித்துள்ளது. இதற்க்கு முன்பு 2011 ஆண்டு மும்பை அணியுடனான போட்டியில் டெல்லி வீரர்கள் 5 பேர் ரன்கள் ஏதும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.

 

ரன்கள் ஏதும் எடுக்காத அணிகளின் பட்டியல்

2011- கொச்சி அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 வீரர்கள்  ரன்  ஏதும் எடுக்காமல்  விக்கெட்டை பறிகொடுத்தனர்.

2011- டெல்லி  அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 5 வீரர்கள்  ரன்  ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

2008- பெங்களூரு அணி பஞ்சாப்  அணிக்கு எதிரான போட்டியில் 5 வீரர்கள்  ரன்  ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

2019- டெல்லி  அணி பஞ்சாப்  அணிக்கு எதிரான போட்டியில் 5 வீரர்கள்  ரன்  ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

 

Categories

Tech |