Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிசப் பண்ட் அதிரடி ஆட்டம்…… டெல்லி அணி அமர்க்களமான வெற்றி…..!!

டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 

ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர்.  ப்ரித்வி ஷா 7 ரன்னிலும் , ஷ்ரேயஸ் ஐயர் 16 ரணிலும்  ஆட்டமிழக்க ஷிகார் தவானுடன் கொலின் இங்ரம் அதிரடியாக ரன் குவித்தனர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகார் தவான் 43(36) கொலின் இங்ரம் 47(32) ரன்னில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் கீமோ பால் , அக்சர் படேல் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரிசப் பண்ட் தந்து ருத்ர தாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார் . இவர் 78(27)* ரன்கள் குவித்ததால் டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மெக்லேனகன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோஹித் சர்மா , குவிண்டால் டிகாக் தொடக்க வீரராக களமிறங்கினர் . மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காத்திருந்தது . அணியின் ரன் 33 இருந்த போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய குவிண்டால் டிகாக்_கும் நிலைத்து நிற்கவில்லை . 16 பந்தில் 27 ரன்கள் எடுத்த குவிண்டால் டிகாக் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்த மும்பை அணி வெற்றிக்காக போராடி வருகின்றது . அந்த அணியின் கைரன் பொலார்ட் பொறுப்புடன் ஆடி வந்த நிலையில் கீமோ பால் பந்து வீச்சில் 13 பந்தில் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் .

அதை தொடர்ந்து வந்த ஹர்டிக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் அக்ஷார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து  குருனால் பாண்டியா 32 (15) யுவராஜ்சிங்  53 (35) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க  அதை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

 

 

கடைசியில் பும்ராவுக்கு கையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் கடைசியாக அவர் களமிறங்கவில்லை. இறுதியில் 19.2 ஓவரில் 176 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் டெல்லி கேப்பிடல் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி அணி  சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா, ரபாடா ஆகியோர் தலா  2 விக்கெட் வீழ்த்தினர்.

Categories

Tech |