Categories
தேசிய செய்திகள்

வற்புறுத்திய ஆண் போலீஸ்…. மறுத்த பெண் போலீஸ்… பின்னர் அரங்கேறிய துயரம்..!!

டெல்லியில் ஆண் போலீஸ் அதிகாரி அவருடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் 26 வயதான   ப்ரீத்தி  அகலாவத் என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணையில், அவரை சக சப்- இன்ஸ்பெக்டரான தீபான்சு ரதி கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னால் அருகே ஒரு காரில் தீபான்சு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து சடலமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தீபான்சு ரதி  சோனிபட்டைச் சேர்ந்தவர். இவர் ரோஹினியில் உள்ள ஒரு வாடகை விடுதியில் தங்கியிருந்தார். பின்னர் இருவரது  உடல்களையும்  போலீசார் கைப்பற்றி கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபான்சு  ப்ரீத்தியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள ப்ரீத்தி மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |