டெல்லியில் ஒரே நாளில் மட்டும் 1,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் முதலில் அதிகமாக பரவிக்கொண்டிருந்த கொரோனா பாதிப்பு, தற்போது சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,016 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,284 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் நேற்று மட்டும் 1,230 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதால், தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பிவர்களின் எண்ணிக்கை 1,44,138 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 11,594 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத் துறை கூறியுள்ளது.