இந்தியாவின் தலைநகரமான டெல்லி நாட்டில் அதிக காற்று மாசுப்பாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காற்று மாசுபாடு எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்தது. அதில் அன்று மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 314 மற்றும் நேற்று காலை 8 மணிக்கு 341 ஆக இருந்தது.
இதனையடுத்து காற்று மாசுபாடின் தரக்குறியீடு 50 ஆக இருந்தால் நல்லது, 100 க்குள் இருந்தால் திருப்திகரமானது, 200 க்குள் இருந்தால் மிதமானது, 300 க்குள் இருந்தால் மோசமானது, 400 க்குள் இருந்தால் மிக மோசமானது மற்றும் 500 க்குள் இருந்தால் கடுமையானது என்று கூறப்படுகிறது. இந்த கணக்கீட்டின் படி நேற்று காற்றின் தரம் மோசமாக இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதன் காரணமாக இன்று காற்றின் தரம் இன்னும் மோசமான நிலை இருக்கும் என்று கூறப்படுகிறது.