Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு…!!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கும்போது  வெளியாகும் புகை டெல்லிக்கு காற்றில் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. காற்றில் மாசு அதிகரிப்பதால் அதன் தரம் குறைந்துகொண்டே போகிறது.

டெல்லியின்  காற்றின் தரம் மோசமாகி வருவது பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வாகனங்கள் ஓட்டுவதும் சவாலானதாக மாறியிருக்கிறது. டெல்லியில் மரம், செடி, கொடிகளை அதிக அளவில் நடுவது காற்று மாசை கட்டுப்படுத்த கொஞ்சம் உதவும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்  இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்று தரக்குறியீடு 377 ஆக இருந்தது. காற்று தரக்குறியீடு 50 என்ற அளவில் இருந்தால்தான் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |