கேரட் சட்னி
தேவையான பொருட்கள் :
கேரட் – 5
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 10
பூண்டு – 3 பல்
புளி – சிறிதளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் சுவையான கேரட் சட்னி தயார்!!!