சேமியா பாயசம்
தேவையான பொருட்கள்:
சேமியா – 100 கிராம்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 1/4 தேக்கரண்டி
முந்திரி – தேவையான அளவு
திராட்சை – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
பாதாம் பவுடர் – 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் சேமியாவை தண்ணீரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நெய்யில் முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் பாலை காயவைத்து, சர்க்கரை , சேமியா , பாதாம் பவுடர் , சேர்த்துக் கிளறி ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான சேமியா பாயசம் தயார் !!!