Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா !!!

சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா செய்வது எப்படி …..
தேவையான பொருட்கள்:

பல்லாரி  – 1/4 கிலோ

கடலை மாவு – 100 கிராம்

அரிசி மாவு – 50 கிராம்

மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

 

onion க்கான பட முடிவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில்  நறுக்கிய  வெங்காயம் , கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள்,   கொத்தமல்லித் தழை  , உப்பு, பெருங்காயம், தண்ணீர் மற்றும் சிறிதளவு சுடவைத்த  எண்ணெய் சேர்த்து  பிசறிக் கொள்ள  வேண்டும். ஒரு  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள மாவை உதிர்த்து  போட்டு பொறித்து எடுத்தால் சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா  தயார் !!!

Categories

Tech |