மட்டன் பெப்பர் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 5
கருவேப்பிலை – தேவையான அளவு
மிளகு – 1 ஸ்பூன்
சீரகப் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பட்டை , கிராம்பு , ஏலக்காய் தாளித்து வெங்காயம் , வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கி கொள்ள வேண்டும் .
பின் கறியை போட்டு வதக்கி , இஞ்சி , பூண்டு , உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி , வெந்தவுடன் மிளகு சீரகப் பொடியைச் சேர்த்து எண்ணெய் தெளிய இறக்கினால்
சுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி!!!