சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல்
தேவையான பொருட்கள்:
மீன் – 1/4 கிலோ
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
எலுமிச்சை – 1/2
சோளமாவு – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வறுத்து நைசாக அரைக்க வேண்டும். பின்னர் தனியே இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ள வேண்டும். மீனுடன் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு , இஞ்சி பூண்டு விழுது , எலுமிச்சை சாறு ,உப்பு , சோளமாவு போட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை அரை மணி நேரம் ஊறவிட்டு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மீனை வறுத்தெடுத்தால் சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் தயார் !!!