வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது
தேவையான பொருட்கள்:
வரகரிசி – கால் கிலோ,
இட்லி அரிசி – கால் கிலோ,
உளுந்து – 50 கிராம்,
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
காய்கறி மசாலா செய்ய தேவையானவை :
கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் – சிறிதளவு,
உருளைக் கிழங்கு – சிறியது 1,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
குடைமிளகாய் – 1,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கை சிறிதாக துருவிக்கொள்ளவும். குடைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்து புளிக்கவையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ்,தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் ஒன்றாக கலக்குங்கள்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள். இந்த தோசையை வாரம் இரண்டு நாட்கள் உங்கள் வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.