ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் அப்பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியிலேயே, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணுக்கு பிரசவத்தின் போது உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்டோர் பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.