Categories
தேசிய செய்திகள்

“டெல்லி முதல்வருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள்”…. காங்கிரஸ் வலுக்கும் கோரிக்கை…!!

டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றம் சாட்டினார். அதாவது, ‘தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்துள்ளேன் என்று அவர் புகார் அளித்தார். இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் இந்த புகார் கொடுத்த உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதில் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். அதன்படி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் குமார் அதற்கான முதல் கோரிக்கையை வைத்துள்ளார். அதாவது ஒரு முதல்வருக்கு குறிப்பிட்ட தொகை வழங்கியதை ஒருவர் தெளிவாக ஒப்புக் கொள்வது இதுவே முதல் முறை. எனவே அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |