Categories
தேசிய செய்திகள்

டெல்லி: போராட்டம் 112 நாட்களை எட்டியது…. 300 விவசாயிகள் உயிரிழப்பு… சோகம்….!!

வேளாண் சட்டங்களை திரும்பிப் பெற போராட்டம் செய்து வரும் டெல்லி விவசாயிகள்…..இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு….

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதனை திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றன. இந்தத் தொடர் போராட்டம் 112 நாட்களை எட்டியுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றன. அந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் விவசாயிகள் இதுவரை 300 பேர் உயிரிழந்ததாக விவசாய அமைப்பு குழு  தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் பெரும்பாலும் கடும் குளிர், மாரடைப்பு, உணவின்மை, போராட்டத்தின்போது வாகன விபத்து ஆகியவற்றால் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பதால், குளிரை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதம் டெல்லியில் கடும் குளிர் ஏற்பட்ட நிலையில் அப்போது மட்டும் 108 விவசாயிகள் இறந்துள்ளனர். மேலும் விவசாயிகள் போராட்டம் செய்யும் பகுதியில் அவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் கூட கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு மோசமான நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து 112 நாட்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில் எந்த முன்னேற்றமும் தோன்றவில்லை என்றும் இது தொடர்பாக மத்திய அரசு  எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Categories

Tech |