Categories
மாநில செய்திகள்

“டெல்லிக்கு செல்ல பிள்ளையான ஓபிஎஸ்”…. இபிஎஸ்க்கு இதுதான் மிகப்பெரிய ஷாக் நியூஸ்…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதற்கு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நாற்காலியான நிரந்தர பொதுச் செயலாளர் பதவி அடைய எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிச்சாமியால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கி சென்றவர்கள் என தேடி தேடி பலரையும் ஓபிஎஸ் பொறுப்புகளில் அமர வைத்து வருகிறார். நிலைமை இப்படி இருக்க ஓபிஎஸ்எப்படி உட்கட்சி மோதலில் எடப்பாடி பழனிச்சாமியை வெற்றி பெற முடியும் என்ற ஒரு கேள்வியை முன்வைத்தால் ஓபிஎஸ் பின்னால் டெல்லி இருப்பதே கைகாட்டுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஓபிஎஸ், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி என அனைவரும் ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே அந்த கட்சியால் நமக்கு பலன் இருக்கும் என்று டெல்லி பாஜக திட்டமிடுகிறதாம்.

அதாவது, எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறித்தி தேர்தலை எதிர்கொண்டால் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என கருதுகிறார்கள். எனவே தேர்தலுக்குள் இணைப்பை சாத்தியமாக வேலைகளை முன்னெடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சின்ன கட்சியாகிவிடும் என்று நேற்று நிகழ்ச்சியில் துக்ளக் குருமூர்த்தி கூறியதை இதில் இணைத்து பார்க்கலாம். டெல்லியின் கருத்தையே குருமூர்த்தி பல நேரங்களில் பிரதிபலித்துள்ளார். இப்போதும் அதே போல தான் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இத்தனை நிர்வாகிகள் நிற்கும்போது அவர் மனதை எப்படி மாற்றுவார் என்று கேட்டால், ஆஸ்பயர் சுவாமிநாதன் ட்விட்டர் பதிவை காட்டுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். “கிரீன் சிக்னல் கொடுத்த டெல்லி மீண்டும் ஓபிஎஸ் இடம் வந்த மைத்ரேயன்! தொடர்ந்து ஓபிஎஸ் இடம் வர காத்திருக்கும் முக்கிய தலைவர்கள். விரைவில் ஒரு இடைத்தேர்தல் சின்னம் முடக்கம். இதை காணப் போகிறோம் விரைவில் காத்திருப்போம். மேலும் சுவாரஸ்யமான பல திருப்பங்களுக்கு என்று அவர் பதிவிட்டுள்ளார். எனவே அதிரடி அரசியல் திருப்பங்கள் இனிவரும் நாட்களில் தான் அதிமுகவில் நடைபெற போகிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.

Categories

Tech |