மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலையங்களிலும் தூர்வாரும் பணி தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ள அண்ணா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 75 ஆக்சிடெண்ட் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: “தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
அந்த வகையில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலையங்களிலும் 66 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.