Categories
உலக செய்திகள்

இது நிறைய இடத்துல வந்துருச்சு…. அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு…!!

டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சீனாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறியுள்ளது. இந்த நிலையில் உருமாறிய கொரானா வைரஸானது  100க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது.

இந்த பரவல் காரணமாக உலக அளவில் அதிக பாதிப்புகளை டெல்டா வகை வைரஸ் ஏற்படுத்தும்.மேலும் மற்ற வகை வைரஸ்களை விட இந்த டெல்டா வைரஸானது மிகவும் ஊறு விளைவிக்கும்” என கூறிய செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 75 லட்சம் மாடர்னா வகை தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |