சைப்ரஸ் ஆராய்ச்சியாளர்கள் “டெல்டாகிரான்” என்ற புதிய வகை வைரஸை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியான நிபுணர் டாக்டர் கிருத்திகா குப்பள்ளி “டெல்டாகிரான்” ஒரு உண்மையான வைரஸே கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது ‘டெல்டாகிரான்’ உண்மையான வைரஸ் கிடையாது. ஆய்வக சோதனையின் போது உருவான கழிவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கோவிட் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினரான கிருத்திகா குப்பள்ளி கூறியுள்ளார். அதேபோல் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ்களுக்கு இவ்வாறு இரண்டு வைரஸ்களின் பெயர்களை ஒன்றிணைத்து பெயர் வைக்க வேண்டாம்.
ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டால் அது ஒரு சில மாதங்கள் அல்லது சில வாரங்களுக்கு பிறகு தான் உருமாறும். அந்த வகையில் பார்த்தால் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு ஒரு சில வாரங்களே ஆகின்றது. அதற்குள் புதிய வகை உருமாறிய வைரஸ் உருவாவது என்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார்.