பிரிட்டனில் இன்னும் சில நாட்களில் கோழி முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படலாம் என்று விவசாயிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
விவசாயிகள், உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகிறது எனவும் அதனை ஈடுசெய்வதற்கு வர்த்தகர்கள் விலையை அதிகரிக்கவில்லையெனில் நாட்டில் முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் முட்டை பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்று பிரிட்டன் முட்டை உற்பத்தியாளர்கள் கவுன்சில் கூறியிருக்கிறது.
உற்பத்தி செலவு வெகுவாக அதிகரித்துள்ளது. தொழில் திவாலாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, 10-15% விவசாயிகள், முட்டை உற்பத்தி தொழிலையே விட்டுவிட்டனர். விடுவதாக உக்ரைனில் நடக்கும் போரால் கோழி தீவனத்தின் விலை உயர்ந்திருக்கிறது. எனவே உற்பத்தி செய்யக்கூடிய முட்டை ஒவ்வொன்றிற்கும் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.