மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்குள்ள தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாசலில் வாழை மரங்கள் மற்றும் வண்ண பலூன்கள் கட்டி வரவேற்பு தோரணங்கள் வைத்துள்ளனர். இதனை அடுத்து வாக்குச்சாவடியின் ஒவ்வொரு இடத்திலும் வண்ண பலூன்கள் பொருத்தப்பட்டு வாக்காளர்களை கவரும் விதமாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி செயலாளர் சுகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் சதீஷ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.