Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கபடுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நீலா தெற்கு வீதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்ற 15, 16-ம் தேதி நடைபெறவிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெகன், மதுசூதனன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதற்கு கூட்டமைப்பு மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-ற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவகுமார் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கபடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வங்கி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Categories

Tech |