மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது நகரச் செயலாளரான பிரகலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்தப் போராட்டமானது காவல்துறையினரை கண்டித்து நடைபெற்றுள்ளது.
அதாவது போலி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்