ஓய்வூதியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்க தலைவரான மாரியப்பன் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து ஓய்வூதியர் சங்கத்தினர் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், சங்க துணை தலைவர், பொருளாளர் என பலரும் கலந்து கொண்டனர்.