பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வீடுகளில் மழை நீர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டிருந்தனர். அதாவது சாலையில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சரான எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு 15 லட்சம் ரூபாய் பணம் மதிப்பில் சாலை, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதன்பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.