கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பகுதியிலிருந்து படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி, சங்கரநத்தம் சுற்று வட்டார பகுதிகளில் 150 – க்கும் மாணவ – மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு என தினமும் சாத்தூர் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் தினசரி மாலை 5.20 – மற்றும், இரவு 7.30 மணிக்கு பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பேருந்து ஒரு சில நேரங்களில் தாமதமாகும், நிறுத்தப்பட்டும் இருக்கின்றது.vஇதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவியர்கள் திடீரென பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதன்பிறகு மாணவ – மாணவியர்கள் பேருந்து நிலையத்திலிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.