Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காவல்துறை அதிகாரியை கண்டிக்கிறோம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வருபவர்கள் மீது அந்த காவல்துறை அதிகாரி பொய் வழக்குகள் பதிவு செய்ததாக கூறியுள்ளனர். மேலும் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அமுல்காஸ்ட்ரோ, சிம்சன், ரவிச்சந்திரன், கலைச்செல்வி ஆகியோர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |