ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பழனி குமார் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அதன்பிறகு பீமா கோரேகான் வழக்கில் கைதான நபர்களை விடுதலை செய்யக்கோரி இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ, மாநில குழு உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.