இந்து முன்னணியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியின் இறுதி நாளான நேற்று பக்தர்கள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் விலக்கில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனை அடுத்து இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு பின்பு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்து அங்கிருந்து சென்றுள்ளனர்.