Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எப்படி அறுந்து விழுந்துச்சு…. மனைவி தர்ணா போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

இறந்து போன தொழிலாளியின் மனைவி நிறுவனத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குப்பத்தா மேட்டூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி காசியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஹாசினி என்ற மகள் உள்ளார். இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென கிரேனில் இருந்த இரும்பு பிளேட்டுகள் சரிந்து விழுந்ததில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின் மற்ற ஊழியர்கள் ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து பெல் நிறுவனத்தின் முன்பாக நஷ்டஈடு கேட்டு ஏழுமலையின் மனைவி மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |