Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழங்கப்படாத உதவித்தொகை…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…..!!

உதவி தொகை வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்கத் தலைவரான சரவணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்துள்ளனர்.

ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் பல அம்ச கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், ஜனநாயக மாதர் சங்க நகர தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |