டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தின் முன்பு பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவரான சந்திரபோஸ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து டாஸ்மார்க் ஊழியர்களுக்கு பணி நிமிர்த்தம் செய்ய வேண்டும் எனவும், தேவையற்ற சோதனைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் முன்னாள் மாநில பொருளாளர், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.