பக்தகோடிகள் சாமியை தரிசனம் செய்ய கோவில்களை திறப்பதற்காக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கோவில்களை மூடியுள்ளது. இந்நிலையில் ஆகம விதிகளின் படி, கோவில்களில் பூஜை மட்டும் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் பக்தகோடிகள் தரிசனம் பெற தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களை திறந்து சாமியை தரிசனம் செய்ய பக்த கோடிகளை அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கியுள்ளார். அப்போது கோவிலை திறக்க கோரி கோஷம் போட்டுயுள்ளனர். இதேபோல் அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் முன்பாகவும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து திருமலை திருகேதீஸ்வரம் கோவிலின் முன்பாகவும் மாவட்டச் செயலாளர் ராஜி தலைமை வகித்து கோவில்களை திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.