Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென நடைபெற்ற போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு…. விருதுநகரில் பரபரப்பு….!!

நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கரபாண்டியபுரம் பகுதியில் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது சி.ஐ.டி.யூ. செயலாளரான சக்திவேல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து மத்திய அரசு நூலிற்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தாராள பஞ்சு நூல் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில துணைத் தலைவர், மாவட்ட துணைத் தலைவர், விசைத்தறி சங்க மாவட்ட செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |