சுகாதாரத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட செயலாளரான சந்திரசேகர் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து கொரோனா நிவாரண பணிக்காக நியமிக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 6 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர், மாவட்ட தலைவர், மாவட்ட இணை செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.