பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி போக்குவரத்து பணிமனையில் இருந்து நரிக்குடி, திருச்சுழி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தங்குவதற்கான ஓய்வறை வசதி இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டிருந்தனர். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதன்பின் பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.