மஸ்தூர் பணியாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு டெங்கு மஸ்தூர் பணியாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பிரகாஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து மஸ்தூர் பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், தங்களுக்கென அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் துணை தலைவர்கள், மாவட்ட செயலாளர், பொருளாளர் என பலரும் கலந்து கொண்டனர்.