தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ், திலக், மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 7ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்கிறார்.
வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். சாம் சி. எஸ் இசையமைக்கும் இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, அஜய் ஞானமுத்து சமூக வலைதளத்தில் இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்குனர் என இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் இதனால் குழப்பத்தில் உள்ளனர்.