Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெனென்ட்’ படத்துடன் ‘மாநாடு’ டீசரை ஒப்பிடுவது பெருமை… வெங்கட் பிரபு டுவீட்…!!!

‘டெனென்ட் படத்துடன் மாநாடு பட டீஸரை ஒப்பிடுவது பெருமை’ என வெங்கட்பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு ‘. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ,கருணாகரன் ,பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி மாநாடு திரைப் படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த படத்தின் டீசர் ஹாலிவுட் படமான ‘டெனென்ட்’ படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில்  ‘மாநாடு டீசரை டெனென்ட் படத்துடன் ஒப்பிடுவது எங்களுக்கு பெருமை  தான் . எனினும் அந்தப் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை . உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு டெனென்ட் படம் புரியவே இல்லை . மாநாடு பட டிரெய்லருக்கு காத்திருங்கள் . அப்போது அதை நீங்கள் வேறொரு படத்துடன் ஒப்பிடலாம்’ என்று பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |