Categories
மாநில செய்திகள்

கட்டுப்படுத்தியுள்ளோம் ”டெங்குவை” தமிழக அரசு தகவல் …!!

தமிழகத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வழக்கறிஞ்சர் சென்னை சூரியபிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை இன்று நடந்த பொது தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டதில்  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருச்சி , கோவை , திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏடிஸ் கொசுவை கண்காணிக்க குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்20,000_த்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

விழிப்புணர்வு மையம் அமைக்கபப்ட்டுள்ளது , பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளது. இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது டெங்குவை கட்டுப்படுத்த முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் முதலமைச்சர் தலைமையில் செப்டம்பர் மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு குறித்த சந்தேகம் மற்றும் விளக்கம் அளிக்க 104 அவசர தொலைபேசி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் வழிவகை செய்து சிகிச்சை பெறுவதன் மூலம் டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் , சுகாதாரத்தை பேணி காப்பது ஒவ்வொரு பொது மக்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதும் அந்த பதில் மனுவில் சொல்லப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் முன்பு பட்டியலிடப்பட்டு இருந்தது. அனால் நீதிமன்றத்தின் நேரம் முடிந்ததால் இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

Categories

Tech |