Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு” கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் புதுச்சேரியை சேர்ந்த நான் தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக பிறப்பிடச் சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாசில்தார் அனுமதி மறுத்துவிட்டார். நாட்டில் 90% பேர் பிறந்தது ஒரு இடமாகவும் வேலை பார்ப்பது மற்றொரு இடமாகவும் தான் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக நான் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தது இல்லை என்று மாறிவிடுமா?

எனவே எனக்கு உடனடியாக சான்றிதழ் தருவதற்கு அனுமதி வழங்குவதோடு, மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மருத்துவம் மேற்படிப்பு கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும், கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் விஷயத்தில் மாணவர் சேர்க்கை குறித்து எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கக்கூடாது. மேலும் புதுச்சேரி மருத்துவ சேர்க்கைக்கான மத்திய குழு மனு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |