Categories
உலக செய்திகள்

முதலில் இதை பண்ணுங்க..! இந்திய தடுப்பூசிக்கு அங்கீகாரம் மறுப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு நிறுவனமான FDA இந்தியாவில் தயார் செய்யப்படும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அங்கீகாரத்தினை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின் எனும் கோவிட்-19 கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயார் செய்து வருகிறது. இந்த தடுப்பூசி மருந்தினை பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகபடுத்த திட்டமிட்டு அதற்கான கூட்டு ஒப்பந்தத்தை அமெரிக்காவில் உள்ள அனுஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால மருந்தாக பயன்படுத்துவதற்காக அனுஜன் நிறுவனத்தின் மூலம் FDA-விடம் அங்கீகாரம் அளிக்க உரிமம் கேட்டுள்ளது.

ஆனால் எமர்ஜெண்சி யூஸ் ஆதரிசேஷன் ( EUA ) என்னும் அவசரகால அங்கீகாரத்தினை கோவாக்சின் மருந்துக்கு வழங்க அமெரிக்காவின் ஃபுட் அண்ட் டிரக்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ( FDA ) மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு மருந்து குறித்த தரவுகள் மற்றும் கூடுதல் தகவல்கள், அதோடு அனுஜன் நிறுவனம் முதலில் பயோலாஜிக்ஸ் லைசென்ஸ் அப்ளிகேஷன் ( BLA ) என்ற விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்குமாறு FDA தெரிவித்துள்ளது.

இதையடுத்து அனுஜன் நிறுவனம் BLA விண்ணப்பம் மற்றும் தடுப்பூசி குறித்த தகவல்களை சமர்ப்பிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதில் சிறிது கால தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் அனுஜன் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கனடாவில் கோவாக்சின் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

Categories

Tech |