டால்பின்களை கரைக்கு கொண்டு வந்து கொல்லும் பாரம்பரிய திருவிழாவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் மக்கள் பல்வேறு பாரம்பரிய திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் டென்மார்க் நாட்டில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவானது கொண்டாடப் பட்டுள்ளது. அதாவது கடலில் உள்ள டால்பின்களை பிடித்து அதனை கரைக்கு கொண்டு வந்து கொல்வது இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் ஆகும்.
தற்பொழுது நடந்த திருவிழாவில் 1428 டால்பின்களை அத்தீவில் உள்ள மக்கள் கரைக்கு எடுத்து வந்து அதனை கொன்றுள்ளனர். இதனால் அந்த கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக இந்த பாரம்பரிய திருவிழாவிற்கு பல்வேறு விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.