59 பயணிகளுடன் வானில் பறந்த இந்தோனேஷியா விமானம் புறப்பட்ட 4 நிமிடத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டு மாயமானதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 59 பயணிகளுடன் பொண்டியநாக் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மாயமான தகவல் வெளியாகியுள்ளது.11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து விலகியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜகார்தாவில் உள்ள சூகர்னோஹட்டா ஸ்ரீவிஜயா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நான்கு நிமிடத்திற்கு பிறகு விமானம் மாயமானதாக தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ விஜயா ஏர் SJ 182 என்ற போயிங் 737-500 என்ற விமானம் மாயமானதாகவும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.