Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர்.

Image result for The ministers of ministers are currently reserved in Maharashtra.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகா தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பாவாருக்கு நிதித்துறை மற்றும் திட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Image result for The ministers of ministers are currently reserved in Maharashtra.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக்கிற்கு உள்துறையும், ஜெயந்த் பாட்டீலுக்கு நீர்வளத்துறையும், நவாப் மாலிக்கிற்கு சிறுபான்மைத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சிவசேனா, மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த பட்டியலுக்கு ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். டிசம்பர் 30ஆம் தேதி, மூன்று கட்சிகளிலிருந்தும் மொத்தம் 36 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

Categories

Tech |