Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு “அலர்ட்”… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்க ஏற்றவாறு  மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அவர்களின் விவரங்களை பட்டியல் எடுத்து உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி துறை எச்சரித்துள்ளது. அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக, 40 சதவீதத்துக்கு மேல்  வாங்கிய தனியார் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அதுபற்றிய அறிக்கையை நாளைக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு தெரிவித்துள்ளது.

Categories

Tech |